மாடியில் இருந்து விழுந்து கட்டிட தொழிலாளி பலி
மாடியில் இருந்து விழுந்து கட்டிட தொழிலாளி பலியானார்.
நாட்டறம்பள்ளியை அடுத்த கல்நார்சம்பட்டி விநாயகபுரம் பகுதியைச் சேர்ந்தவர் சம்பத் (வயது 45), தொழிலாளி. இவர் அதேப்பகுதியில் புதிதாக கட்டப்படும் வீட்டு மாடியில் சென்ட்ரிங் வேலைசெய்து கொண்டு இருந்தார். அப்போது நிலை தடுமாறி மாடியில் இருந்து கீழே தவறி விழுந்து தலையில் காயம் ஏற்பட்டது.
அவரை சிகிச்சைக்காக திருப்பத்தூர் அரசு மருத்துவக் மனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் வழியிலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இது குறித்து அவரது மனைவி ராதிகா நேற்று நாட்டறம்பள்ளி போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார். அதன் பேரில் இன்ஸ்பெக்டர் சாந்தி, சப்- இன்ஸ்பெக்டர் முனிரத்தினம் ஆகியோர் விசாரணை நடத்தி வருகின்றனர்.