மாடியில் இருந்து தவறி விழுந்த கட்டிட தொழிலாளி சாவு

கோவில்பட்டி அருகே மாடியில் இருந்து தவறி விழுந்த கட்டிட தொழிலாளி பரிதாபமாக இறந்தார்.

Update: 2022-07-09 16:43 GMT

கோவில்பட்டி:

கோவில்பட்டி அருகே உள்ள இலுப்பையூரணி கிராமத்தைச் சேர்ந்தவர் சந்தன மாரியப்பன் (வயது 60). கட்டிட தொழிலாளி. இவர் சம்பவத்தன்று மந்தித்தோப்பு கணேஷ்நகரில் புதிதாக கட்டப்பட்டு வரும் வீட்டில் பணியில் ஈடுபட்டு இருந்தார். அப்போது வீட்டு மாடியில் பணி செய்தபோது, எதிர்பாராதவிதமாக தவறி கீழே விழுந்தார். இதில் படுகாயம் அடைந்த அவரை கோவில்பட்டி அரசு ஆஸ்பத்திரியில் அனுமதித்தனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக நெல்லை அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று முன்தினம் அவர் பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து கோவில்பட்டி மேற்கு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்