மனைவியை அரிவாளால் வெட்டிய கட்டிட தொழிலாளி கைது

பூதப்பாண்டி அருகே மனைவியை அரிவாளால் வெட்டிய கட்டிட தொழிலாளியை போலீசார் கைது செய்தனர்.

Update: 2022-11-28 18:45 GMT

அழகியபாண்டியபுரம்:

பூதப்பாண்டி அருகே மனைவியை அரிவாளால் வெட்டிய கட்டிட தொழிலாளியை போலீசார் கைது செய்தனர்.

குடும்ப தகராறு

பூதப்பாண்டி அருகே உள்ள ஈசாந்திமங்கலம் பகுதியை சேர்ந்தவர் ஹெலன் மேரி (வயது 37), இவருக்கும் நாகர்கோவில் தளவாய்புரம் பகுதி சேர்ந்த கட்டிட தொழிலாளியான யூஜின் அருள்சீலன் (48) என்பவருக்கும் கடந்த 17 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்தது. இவர்களுக்கு ஒரு மகனும், ஒரு மகளும் உள்ளனர். கணவன்-மனைவிக்கு இடையே அடிக்கடி குடும்பத்தகராறு ஏற்பட்டு வந்தது. இதன்காரணமாக கணவன்-மனைவி இருவரும் கடந்த 2½ ஆண்டுகளாக பிரிந்து வாழ்ந்து வருகின்றனர். குழந்தைகள் கணவர் யூஜின் அருள்சீலனிடம் வசித்து வருகிறார்கள். யூஜின் அருள்சீலன் மீது பூதப்பாண்டி போலீஸ் நிலையத்தில் மனைவி மற்றும் மாமனாரை கத்தியால் குத்தியது தொடர்பாக ஒரு வழக்கு பதிவு செய்யப்பட்டு நிலுவையில் உள்ளது.

அரிவாள் வெட்டு

சம்பவத்தன்று யூஜின் அருள்சீலன் மனைவியிடம் தகராறில் ஈடுபட்டுள்ளார். இதில் ஆத்திரமடைந்த யூஜின் அருள்சீலன், அருகில் கிடந்த அரிவாளால் மனைவியின் கழுத்து மற்றும் கன்னம் ஆகிய பகுதிகளில் சரமாரியாக வெட்டினார். இதில் படுகாயமடைந்த ஹெலன்மேரி அலறினார். அவரது சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் ஓடி வந்து அவரை மீட்டு சிகிச்சைக்காக ஆசாரிபள்ளம் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இதுகுறித்த புகாரின் பேரில் பூதப்பாண்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து யூஜின் அருள்சீலனை கைது செய்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்