ஸ்ரீரங்கம் கோவில் கோபுரத்தை சீரமைக்க சாரம் கட்டும் பணி தீவிரம்

ஸ்ரீரங்கம் கோவில் கோபுரத்தை சீரமைக்க சாரம் கட்டும் பணி தீவிரமாக நடந்தது.

Update: 2023-08-06 20:05 GMT

ஸ்ரீரங்கம்:

சாரம் கட்டும் பணி

ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலை சுற்றி சிறியதும், பெரியதுமாக 27 கோபுரங்கள் உள்ளன. இதில் கீழ சித்திரை வீதியையும், கீழ அடையவளஞ்சான் வீதியையும் இணைக்கும் வகையில் கிழக்கு வாசல் நுழைவு கோபுரம் உள்ளது. இந்த கோபுரம் 8 நிலைகளைக் கொண்டது. இந்த கோபுரத்தின் முதல் நிலையின் முன்புறத்தில் உள்ள சுவர் (கொடுங்கை) நேற்று முன்தினம் அதிகாலை திடீரென இடிந்து விழுந்தது.

இதையடுத்து இந்து சமய அறநிலையத்துறை ஆணையர் முரளிதரன் நேற்று முன்தினம் நேரில் வந்து கோபுரத்தை பார்வையிட்டார். இதைத்தொடர்ந்து கிழக்கு கோபுரத்தை சீரமைக்கும் பணிகளுக்காக சாரம் கட்டும் பணி தீவிரமாக நடந்து வருகிறது.

அனைத்து கோபுரங்களையும்...

இந்நிலையில் சேதமடைந்த கோபுரத்தை நேற்று அமைச்சர் கே.என்.நேரு நேரில் பார்வையிட்டார். அப்போது சீரமைப்பு பணிகளை விரைந்து முடிக்க வேண்டும். என்.ஐ.டி. கல்லூரி தொழில்நுட்ப பிரிவு மாணவர்களை கொண்டு கிழக்கு கோபுரம் உள்பட கோவிலில் உள்ள அனைத்து கோபுரங்களையும் ஆய்வு செய்து புனரமைக்க வேண்டும் என்று கலெக்டர் மற்றும் கோவில் இணை ஆணையருக்கு உத்தரவிட்டார்.

ஆய்வின் போது கலெக்டர் பிரதீப்குமார், மேயர் அன்பழகன், பழனியாண்டி எம்.எல்.ஏ., கோவில் இணை ஆணையர் சிவராம்குமார் உள்பட பலர் உடனிருந்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்