ரூ.6¾ லட்சத்தில் கழிவு நீர் கால்வாய் அமைக்கும் பணி தொடக்கம்

ரூ.6¾ லட்சத்தில் கழிவு நீர் கால்வாய் அமைக்கும் பணி தொடங்கியது.

Update: 2022-11-07 19:10 GMT

சோளிங்கரை அடுத்த கிருஷ்ணாபுரம் கிராமத்தில் 30 ஆண்டுகளாக கழிவுநீர் கால்வாய் இல்லாமல் அவதிப்படுவதாக மாவட்ட ஊராட்சி குழு துணைத்தலைவர் நாகராஜிடம் கிராம மக்கள் மனு அளித்தனர். மனுவை ஏற்றுக்கொண்டு கழிவுநீர் கால்வாய் அமைப்பதாக உறுதியளித்தார். அதன்படி கிருஷ்ணாபுரம் கிராமத்தில் மாவட்ட ஊராட்சிக் குழு துணைத்தலைவர் நிதியில் இருந்து 6 லட்சத்து 75 ஆயிரம் மதிப்பீட்டில் கழிவுநீர் கால்வாய் அமைப்பதற்கான பூமி பூஜை நடைபெற்றது. ஒன்றியக் குழு துணைத் தலைவர் பூங்கொடி ஆனந்தன், ஒன்றியக் குழு உறுப்பினர் புலிவலம் நதியாமதன்குமார், புலிவலம் ஊராட்சி மன்ற தலைவர் திருமலை ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

சோளிங்கர் மத்திய ஒன்றிய தி.மு.க. செயலாளர் பூர்ணசந்தர் தலைமை தாங்கி பூமிபூஜையை தொடங்கி வைத்தார். அப்போது பணியை விரைந்து முடிக்கவும், கட்டுமான‌ பொருட்கள் தரமாக இருக்க வேண்டும் என கேட்டுக்கொண்டார். தொடர்ந்து மாற்றுத்திறனாளி, விதவை, முதியோருக்கு உதவித்தொகை வழங்கினார். மத்திய ஒன்றிய நிர்வாகிகள் மணி, லோகநாதன், பார்த்திபன், தங்கதுரை, பாபு, பூபாலன், எத்திராஜ் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்