புதிய நாடக மேடை கட்ட பணிகள் தொடக்கம்
புதிய நாடக மேடை கட்ட பணிகள் தொடங்கப்பட்டது.;
தோகைமலை அருகே கொசூர் ஊராட்சி குப்பமேட்டுப்பட்டி கிராமத்தில் புதிய நாடக மேடை கட்டி தர வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனர். இதையடுத்து குளித்தலை சட்டமன்ற தொகுதி மேம்பாட்டு நிதியில் இருந்து புதிய நாடக மேடை கட்ட ரூ.8½ லட்சம் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு அதற்கான பூமி பூைஜ நடைபெற்றது.
இதற்கு மாவட்ட பிரதிநிதி கொசூர் அய்யர் தலைமை தாங்கினார். கிருஷ்ணராயபுரம் ஒன்றியக் குழுத்தலைவர் சுமித்ராதேவி, கே.ஆர்.புரம் ஒன்றிய ஆணையர் தவமணி, தி.மு.க. முன்னாள் மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் மகாலிங்கம், மக்கள் நல பணியாளர் பழனிச்சாமி ஆகியோர் முன்னிலை வகித்தனர். சிறப்பு அழைப்பாளராக குளித்தலை எம்.எல்.ஏ. மாணிக்கம் கலந்து கொண்டு நாடக மேடை கட்டுவதற்கான பணிகளை பூமி பூஜை செய்து தொடங்கி வைத்தார். இதில், கிருஷ்ணராயபுரம் தெற்கு ஒன்றிய பொறுப்பாளர் கரிகாலன், மத்தகிரி ஊராட்சி மன்றத்தலைவர் தங்கராசு, கொசூர் ஊராட்சி மன்ற துணைத்தலைவர் வைரப்பெருமாள், இளைஞரணி துணை அமைப்பாளர் செல்வம், கொசூர் ஊராட்சி செயலாளர் சண்முகம், அண்ணாவி உள்பட பலர் கலந்து கொண்டனர்.இதேபோல் கொசூர் பஸ் நிறுத்தத்தில் குளித்தலை சட்டமன்ற தொகுதி மேம்பாட்டு நிதியில் இருந்து ரூ.7 லட்சத்தில் கட்டப்பட்ட பயணிகள் நிழற்குடையும் பொதுமக்கள் பயன்பாட்டிற்காக திறந்து வைக்கப்பட்டது.