ரூ.70 லட்சத்தில் தார்சாலை, பாலம் கட்டும் பணி

செம்பட்டி அருகே ரூ.70 லட்சத்தில் தார்சாலை, பாலம் கட்டும் பணிக்கு அமைச்சர் இ.பெரியசாமி அடிக்கல் நாட்டினார்.

Update: 2023-06-22 15:39 GMT

செம்பட்டி அருகே எஸ்.பாறைப்பட்டி ஊராட்சி கெண்டையம்பட்டி கிராமத்தில், மகாத்மாகாந்தி தேசிய ஊரக வேலை வாய்ப்பு உறுதி திட்டத்தின் கீழ், ரூ.70 லட்சம் மதிப்பில் கெண்டையம்பட்டி முதல் வண்ணம்பட்டி வரை தார்சாலை மற்றும் பாலம் கட்டப்பட உள்ளது. இந்த பணிகளுக்கான அடிக்கல் நாட்டு விழா கெண்டையம்பட்டியில் நடந்தது. விழாவுக்கு அமைச்சர் இ.பெரியசாமி தலைமை தாங்கி பணியை தொடங்கி வைத்தார்.

விழாவில் அமைச்சர் இ.பெரியசாமி பேசுகையில், தமிழகம் முழுவதும் 10 ஆயிரம் கி.மீட்டர் தூரத்துக்கு சாலை மேம்பாட்டு பணி நடந்து வருகிறது. அனைத்து கிராமங்களிலும் மயானத்துக்கு செல்லும் சாலைகள் சீரமைக்கப்பட்டு வருகின்றன என்றார்.

இதைத்தொடர்ந்து ரூ.42 லட்சம் மதிப்பில் முடிவடைந்த திட்ட பணிகளை அமைச்சர் திறந்து வைத்தார். விழாவில் ஆத்தூர் ஒன்றியக்குழு தலைவர் மகேஸ்வரி முருகேசன், துணை தலைவர் ஹேமலதா மணிகண்டன், ஆத்தூர் (மேற்கு) ஒன்றிய தி.மு.க. செயலாளர் ராமன், எஸ்.பாறைப்பட்டி ஊராட்சி மன்ற தலைவர் பாலாஜி, ஊராட்சி மன்ற செயலர் பாலாஜி, ஆத்தூர் வட்டார வளர்ச்சி அலுவலர் (கிராம ஊராட்சி) தட்சிணாமூர்த்தி, ஒன்றிய கவுன்சிலர் காணிக்கைசாமி, கெண்டையம்பட்டி தி.மு.க. கிளை செயலாளர் சாமிராஜ் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்