ரூ.2 கோடியில் தார் சாலை அமைக்கும் பணி
கொல்லியங்குணத்தில் ரூ.2 கோடியில் தார் சாலை அமைக்கும் பணியை அமைச்சர் செஞ்சி மஸ்தான் தொடங்கி வைத்தார்.
மயிலம்:
மயிலம் ஒன்றியம் கொல்லியங்குணத்தில் இருந்து நல்லாமூர் வரை முதல்-அமைச்சரின் சாலை மேம்பாட்டு திட்டத்தின் கீழ் ரூ.1 கோடியே 93 லட்சம் மதிப்பீட்டில் தார் சாலை அமைக்கும் பணியை அமைச்சர் செஞ்சி மஸ்தான் தொடங்கி வைத்தார். இந்நிகழ்ச்சியில் மயிலம் ஒன்றியக்குழு தலைவர் யோகேஸ்வரி மணிமாறன், மாவட்ட தி.மு.க. அவைத்தலைவர் டாக்டர் சேகர், மயிலம் வடக்கு ஒன்றிய செயலாளர் மணிமாறன், மத்திய ஒன்றிய செயலாளர் செழியன், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் பரிமேலழகன், தேவதாஸ், கொல்லியங்குணம் ஊராட்சி மன்ற தலைவர் ஜோதிலட்சுமி வர்ணமுத்து, முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் ஜோதி, மாவட்ட பொருளாளர் ரவி, மாவட்ட பிரதிநிதி பிரகாஷ், கலை இலக்கிய பகுத்தறிவு பேரவை மாவட்ட அமைப்பாளர் செந்தில், கவுன்சிலர்கள் செல்வகுமார், கயல்விழி, மற்றும் மாவட்ட, ஒன்றிய கவுன்சிலர்கள் கலந்து கொண்டனர்.