ரூ.40 கோடியில் மதகு பாலம் கட்டும் பணி
ரூ.40 கோடியில் மதகு பாலம் கட்டும் பணி
கபிஸ்தலம்:
கபிஸ்தலம் அருகே மேட்டு தெருவில் அமைந்துள்ள காவிரி அரசலாறு தலைப்பில் ரூ.40 கோடி மதிப்பீட்டில் புதிய மதகு பாலம் கட்டும் பணி நடைபெற்று வருகிறது. இந்த பணிகளை திருச்சி மண்டல நீர்வளத்துறை தலைமை பொறியாளர் சுப்பிரமணியன் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
மேலும் குறுவை பாசனத்திற்காக காவிரி, அரசலாறு மற்றும் மண்ணியாற்றில் தண்ணீர் திறக்கப்பட்டுள்ளதையும் பார்வையிட்டு ஆய்வு செய்தார். இந்த ஆய்வின் போது செயற்பொறியாளர் இளங்கோ, உதவி செயற்பொறியாளர்கள் யோகேஸ்வரன், முத்துமணி, உதவி பொறியாளர் வெங்கடேசன் ஆகியோர் உடன் இருந்தனர்.