ரூ.86 லட்சத்தில் சாலைகள் அமைக்கும் பணி
ரூ.86 லட்சத்தில் சாலைகள் அமைக்கும் பணியை பேரூராட்சி தலைவர் தொடங் கிவைத்தார்.
வாணியம்பாடியை அடுத்த உதயேந்திரம் பேரூராட்சிக்குட்பட்ட பகுதிகளில் சாலை வசதி செய்துதர வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை வைத்து வந்தனர். அதன் பேரில் உதயேந்திரம் பேரூராட்சி தலைவர் பூசாராணி ஆய்வு செய்து புதிதாக சிமெண்டு சாலை அமைக்க நகர்ப்புற சாலைகள் மேம்பாட்டு திட்டத்தின் கீழ் ரூ.86 லட்சத்து 20 ஆயிரம் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது.
அதைத்தொடர்ந்து புதிதாக சிமெண்டு சாலைகள் அமைக்கும் பணிக்கான பூமி பூஜை நேற்று நடந்தது. உதயேந்திரம் பேரூராட்சி தலைவர் பூசாராணி கலந்துகொண்டு பூமி பூஜை செய்து பணிகளை தொடங்கி வைத்தார்.
நிகழ்ச்சியில் பேரூராட்சி மன்ற உறுப்பினரும், கூட்டுறவு சங்க துணைத் தலைவருமான ஆ.செல்வராஜ், மன்ற உறுப்பினர்கள் மரியஜோசப், சந்தியா பழனி, உதவி பொறியாளர் ராஜேஷ், பேரூராட்சி அலுவலர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.