திருநாவலூர் அருகே ரூ.6½ கோடியில் ஒழுங்குமுறை விற்பனைக்கூடம் கட்டும் பணியை மணிக்கண்ணன் எம்.எல்.ஏ. தொடங்கி வைத்தார்.

திருநாவலூர் அருகே ரூ.6½ கோடியில் ஒழுங்குமுறை விற்பனைக்கூடம் கட்டும் பணி மணிக்கண்ணன் எம்.எல்.ஏ. தொடங்கி வைத்தார்

Update: 2022-09-16 18:45 GMT

உளுந்தூர்பேட்டை, 

திருநாவலூர் அருகே சமத்துவபுரத்தில் ரூ.6 கோடியே 50 லட்சம் செலவில் புதிதாக ஒழுங்குமுறை விற்பனைக்கூடம் கட்டும் பணிக்கான அடிக்கல் நாட்டு விழா நடைபெற்றது. விழாவுக்கு உளுந்தூர்பேட்டை சட்டமன்ற உறுப்பினர் மணிக்கண்ணன் தலைமை தாங்கி, ஒழுங்குமுறை விற்பனைக் கூடம் கட்ட அடிக்கல் நாட்டி, அதற்கான பணியை தொடங்கி வைத்தார். விழாவில் ஒன்றிய குழு தலைவர் சாந்தி இளங்கோவன், முன்னாள் மாவட்ட கவுன்சிலர் பத்மநாபன், முன்னாள் ஒன்றியக்குழு தலைவர் சுந்தரமூர்த்தி, உதவி பொறியாளர் சரவணபவ, செயலாளர் விஷ்ணப்பன், கண்காணிப்பாளர் ஆனந்த்ராஜ், தொழில்நுட்ப பிரிவு கிளாப்பாளையம் மணிகண்டன் மற்றும் தி.மு.க. நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்