பயணிகள் நிழற்குடை அமைக்கும் பணி
கொணவக்கரை ஊராட்சியில் பயணிகள் நிழற்குடை அமைக்கும் பணி நடந்தது.
கோத்தகிரி
கோத்தகிரி ஊராட்சி ஒன்றியம் கொணவக்கரை ஊராட்சிக்கு உட்பட்ட குறிஞ்சி நகர், வணகம்பை பகுதியில் ஏராளமான குடியிருப்புகள் உள்ளன. இந்த பகுதி மக்கள் அத்தியாவசிய தேவைகளுக்கும், கல்வி கற்பதற்கும், பணிக்கு செல்லவும் கெங்கரை மற்றும் கோத்தகிரி செல்வதற்கு பஸ்சுக்காக காத்திருக்க வேண்டி இருந்தது. ஆனால், அங்கு பயணிகள் நிழற்குடை இல்லாததால் சிரமப்பட்டு வந்தனர். இதையடுத்து ஊராட்சி சார்பில், நாடாளுமன்ற உறுப்பினர் நிதியில் இருந்து ரூ.5 லட்சம் நிதி பெறப்பட்டு நிழற்குடை அமைக்கும் பணிகள் தொடங்கி நடைபெற்று வருகிறது. தற்போது மேற்கூரையில் கான்கிரீட் அமைக்கும் பணி முடிவடைந்து உள்ளது. பணிகள் நிறைவு பெற்று விரைவில் பயணிகள் நிழற்குடை பொதுமக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வரப்பட உள்ளதால் அப்பகுதி மக்கள் மகிழ்ச்சியடைந்து உள்ளனர்.