மாடப்பள்ளி ஊராட்சியில் ரூ.26½ லட்சத்தில் மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி கட்டும் பணி

மாடப்பள்ளி ஊராட்சியில் ரூ.26½ லட்சத்தில் மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி கட்டும் பணி யை நல்லதம்பி எம்.எல்.ஏ. தொடங்கி வைத்தார்.

Update: 2023-06-10 17:49 GMT

மாடப்பள்ளி ஊராட்சியில் ரூ.26½ லட்சத்தில் மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி கட்டும் பணி யை நல்லதம்பி எம்.எல்.ஏ. தொடங்கி வைத்தார்.

திருப்பத்தூர் ஒன்றியம் மாடப்பள்ளி ஊராட்சி களரூர் பேட்டையான் வட்டம் பகுதியில் மேல்நிலை நீர் தேக்க தொட்டி மிகவும் பழுதடைந்து இடியும் நிலையில் இருந்தது. இதனை அகற்றி அப்பகுதி மக்களின் கோரிக்கையை ஏற்று 15, வது நிதிக்குழு மானியம் வட்டார ஊராட்சி குழு நிதியிலிருந்து ரூ.26.44 லட்சம் செலவில் 60 ஆயிரம் லிட்டர் கொள்ளளவு கொண்ட மேல்நிலை நீர்தேக்க தொட்டி கட்டும் பணி தொடக்க விழா களரூர் பகுதியில் நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு ஒன்றிய கவுன்சிலர் கஸ்தூரி ரகு தலைமை வகித்து அனைவரையும் வரவேற்றார். ஊராட்சி மன்ற தலைவர் கோமதி கார்த்திகேயன் முன்னிலை வகித்தார் மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி கட்டும் பணியை ஏ.நல்லதம்பி எம்.எல்.ஏ. பூமி பூஜை செய்து பணியினை தொடங்கி வைத்து பேசினார் .

நிகழ்ச்சியில் திருப்பத்தூர் வட்டார வளர்ச்சி அலுவலர்கள் சங்கர், தினகரன், திருப்பத்தூர் ஒன்றிய குழு தலைவர் திருமதி விஜியா அருணாச்சலம், துணைத் தலைவர் டி.ஆர். ஞானசேகரன், மாடப்பள்ளி வேளாண்மை கூட்டுறவு கடன் சங்க தலைவர் தேவராஜன், துணைத் தலைவர் சாமி கண்ணு, முன்னாள் ஒன்றிய கவுன்சிலர் சிவலிங்கம், ஊராட்சி மன்ற தலைவர் ராமச்சந்திரன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.


Tags:    

மேலும் செய்திகள்