ரூ.45 லட்சத்தில் புதிய சாலை அமைக்கும் பணி; மேயர் தொடங்கி வைத்தார்
நெல்லையில் ரூ.45 லட்சத்தில் புதிய சாலை அமைக்கும் பணியை மேயர் சரவணன் தொடங்கி வைத்தார்.
நெல்லை மாநகராட்சி 21-வது வார்டு செல்வவிநாயகர் கோவில் தெற்கு தெருவில் ரூ.45 லட்சம் மதிப்பில் புதிய காங்கிரீட் சாலை அமைக்கும் பணியை நேற்று மேயர் பி.எம்.சரவணன் தொடங்கி வைத்தார்.
இந்த நிகழ்ச்சியில் துணை மேயர் கே.ஆர்.ராஜூ, மண்டல தலைவர் மகேஸ்வரி, மாநகராட்சி இளநிலை பொறியாளர் பட்டுராஜன் மற்றும் கவுன்சிலர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.