இலங்கை தமிழர்களுக்கு புதிய குடியிருப்புகள் கட்டும் பணி தொடக்கம்
இலங்கை தமிழர்களுக்கு புதிய குடியிருப்புகள் கட்டும் பணி தொடங்கப்பட்டது.;
தாயில்பட்டி,
வெம்பக்கோட்டை அணையின் அருகே உள்ள இலங்கை அகதிகள் முகாமில் 300-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இதில் பலருடைய குடியிருப்புகள் முற்றிலும் சேதமடைந்து விட்டன. இந்தநிலையில் தமிழக அரசு இலங்கை தமிழர் மறுவாழ்வு முகாம் புதிய இடத்திற்கு விரைவில் மாற்றப்படும் என அறிவித்திருந்தது. அதன் பேரில் வெம்பக்கோட்டை சுற்றுவட்டார பகுதியில் கணஞ்சாம்பட்டி, துலுக்கன்குறிச்சி ஆகிய இடங்களில் புதிய இலங்கை தமிழர் மறுவாழ்வு முகாம் அமைப்பது பற்றி ஆய்வு செய்யப்பட்டது. தற்போது துலுக்கன்குறிச்சியில் புதிய முகாம் அமைக்க இடம் தேர்வு செய்யப்பட்டு 6 ஏக்கர் பரப்பளவில் 352 வீடுகள் கட்டும்பணி தொடங்கியது. வீடுகள் மட்டுமின்றி நூலகம், சமுதாயக்கூடம், மயானம், ரேஷன் கடை, விளையாட்டு திடல் ஆகியவையும் அமைக்கப்பட உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.