மும்முனை மின்சாரத்திற்கு புதிய மின்கம்பங்கள் அமைக்கும் பணி

நெடும்புலி ஊராட்சியில் மும்முனை மின்சாரத்திற்கு புதிய மின்கம்பங்கள் அமைக்கும் பணி தொடங்கியது.

Update: 2023-09-08 18:45 GMT

நெமிலி ஒன்றியத்திற்குட்பட்ட நெடும்புலி ஊராட்சியில் உள்ள பெரிய தெரு, பஜனை கோவில் தெரு ஆகிய பகுதிகளில் பல ஆண்டுகளாக மும்முனை மின்சாரம் இல்லாமல் பொதுமக்கள் மிகவும் அவதிக்கு உள்ளாகி வந்தனர். இது தொடர்பாக பொதுமக்கள் கோரிக்கை வைத்து வந்தனர். இதையடுத்து நெடும்புலி ஊராட்சி மன்றத்தில் மும்முனை மின்சாரம் வழங்க தீர்மானம் இயற்றப்பட்டு அரசின் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டது.

இந்தநிலையில் நேற்று நகர்ப்புற மின்சார திட்டத்தின் கீழ் மும்முனை மின்சாரம் வினியோகம் செய்ய புதிய மின்கம்பங்கள் அமைக்கும் பணியை நெடும்புலி ஊராட்சி மன்றதலைவர் மாறன் பூமிபூஜை செய்து தொடங்கி வைத்தார். இதில் உதவி செயற்பொறியாளர் துரைசங்கர், இளநிலை பொறியாளர் சுப்பிரமணி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்