ரூ.25½ லட்சத்தில் புதிய வகுப்பறைகள் கட்டும் பணி
அணைக்கரை கோட்டாலத்தில் ரூ.25½ லட்சத்தில் புதிய வகுப்பறைகள் கட்டும் பணியை ஒன்றியக்குழு தலைவர் ஆய்வு செய்தாா்.
கள்ளக்குறிச்சி:
கள்ளக்குறிச்சி ஒன்றியம் அணைக்கரைகோட்டாலம் கிராமத்தில் ஊராட்சி ஒன்றிய பள்ளி வளாகத்தில் குழந்தை நேய பள்ளி உட்கட்டமைப்பு மேம்பாட்டு திட்டத்தின் கீழ் ரூ.25 லட்சத்து 50 ஆயிரம் மதிப்பில் புதியதாக 2 வகுப்பறைகள் கட்டும் பணி நடைபெற்று வருகிறது. இந்த பணியை ஒன்றியக்குழு தலைவர் அலமேலு ஆறுமுகம் நேற்று ஆய்வு செய்தார். பின்னர் அவர், கட்டிட பணிகளை விரைவாகவும், தரமாகவும் முடிக்க வேண்டும் என்று அதிகாரிகளுக்கும், ஒப்பந்ததாரருக்கும் உத்தரவிட்டார். ஆய்வின்போது உதவி பொறியாளர் தனபால், தி.மு.க. மாவட்ட துணை செயலாளர் ஆறுமுகம், ஊராட்சி மன்ற தலைவர் வெங்கடேசன், முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் கந்தசாமி மற்றும் அரசு அதிகாரிகள் உடன் இருந்தனர்.