ரூ.3½ கோடியில் திருமண மண்டபம் கட்டும் பணி

Update: 2023-04-14 19:45 GMT

சேலம் மாநகரில் மிகவும் பிரசித்தி பெற்ற சுகவனேசுவரர் கோவில் உள்ளது. இந்த கோவிலில் ஆண்டுதோறும் சுமார் 300-க்கும் மேற்பட்ட திருமணங்கள் நடைபெற்று வருகின்றன. இதனிடையே, 2021-2022-ம் ஆண்டிற்கான சட்டமன்ற அறிவிப்பின்படி சுகவனேசுவரர் கோவிலில் 500 இருக்கைகள் கொண்ட மண்டபம் மற்றும் 300 பேர் அமரக்கூடிய உணவருந்தும் கூடம் கொண்ட புதிய திருமண மண்டபம் கட்டப்படும் என்று அறிவிக்கப்பபட்டது. இதற்காக ரூ.3 கோடியே 60 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது.

இந்தநிலையில், சுகவனேசுவரர் கோவிலில் புதிய திருமண மண்டபம் கட்டுவதற்கான அடிக்கல் நாட்டு விழா நடந்தது. இதில், சென்னையில் இருந்தவாறு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் காணொலி காட்சி மூலம் பங்கேற்று அடிக்கல் நட்டு, திருமண மண்டப கட்டுமான பணியை தொடங்கி வைத்தார். இதைத்தொடர்ந்து கோவில் வளாகத்தில் நடந்த நிகழ்ச்சியில், மாவட்ட கலெக்டர் கார்மேகம், சேலம் இந்து சமய அறநிலையத்துறை இணை ஆணையர் மங்கையர்க்கரசி, கோவில் அறங்காவலர் குழு தலைவர் வள்ளியப்பா, அறங்காவலர்கள் தம்பிதுரை, அன்புமணி, லதாசேகர், தங்கதுரை, உதவி ஆணையர் சரவணன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

மேலும் செய்திகள்