தூத்துக்குடியில்உயர் மின்கோபுரம் அமைக்கும் பணி

தூத்துக்குடியில்உயர் மின்கோபுரம் அமைக்கும் பணியை மேயர் ஜெகன்பெரியசாமி ஆய்வு செய்தார்.

Update: 2023-02-09 18:45 GMT

தூத்துக்குடி மாநகராட்சி பகுதியில் ஸ்மார்ட் சிட்டி திட்ட பணிகள் நடந்து வருகின்றன. இந்த பணிகளை மாநகராட்சி மேயர் தொடர்ந்து ஆய்வு செய்து விரைவுபடுத்தி வருகிறார். இந்த நிலையில் தூத்துக்குடி மாநகராட்சிக்கு உட்பட்ட சிதம்பர நகர் சந்திப்பில் மாலை நேரத்தில் சிறிய அளவிலான கடைகள் வைத்து வியாபாரிகள் வியாபாரம் செய்து வருகின்றனர். இங்கு போதுமான வெளிச்சம் இல்லாததால் வியாபாரிகள் மற்றும் பொதுமக்கள் சிரமப்பட்டு வந்தனர். இதனை தொடர்ந்து அந்த பகுதியில் உயர்மின்கோபுரம் அமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு பணிகள் நடந்து வருகின்றன. இந்த பணிகளை மாநகராட்சி மேயர் ஜெகன் பெரியசாமி நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார். அப்போது மாநகராட்சி அலுவலர்கள் உடன் இருந்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்