ரூ.2 கோடியில் தரைப்பாலம் அமைக்கும் பணி

திருவண்ணாமலை கலெக்டர் அலுவலகம் எதிரில் ரூ.2 கோடியில் தரைப்பாலம் அமைக்கும் பணி

Update: 2022-06-28 12:26 GMT

திருவண்ணாமலை கலெக்டர் அலுவலகம் எதிரில் வேங்கிக்கால் பெரிய ஏரி உள்ளது.

இந்த ஏரியில் இருந்து தண்ணீர் கோடி போகும் பகுதியில் இருந்து தண்ணீர் சாலையை கடக்கும் வகையில் நெடுஞ்சாலைத்துறை சார்பில் ரூ.2 கோடியில் தரைப்பாலம் அமைக்கும் பணியும், அதன் அருகில் 2 சிறுபாலம் அமைக்கும் பணியும் நடைபெற்று வருகிறது.

இந்த நிலையில் தரைப்பாலத்திற்கு கான்கிரீட் அமைக்கும் பணி இன்று நடைபெற்றது.

அந்த பணியை நெடுஞ்சாலைத்துறை கோட்ட பொறியாளர் முரளி நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார். அப்போது, அவர் பணிகளை தரமாகவும், விரைந்து முடிக்கவும் அலுவலர்களுக்கு உத்தரவிட்டார்.

ஆய்வின் போது உதவி கோட்ட பொறியாளர் இன்பநாதன், உதவி பொறியாளர்கள் கலைமணி, இளஞ்செழியன், சாலை ஆய்வாளர் பச்சையப்பன் ஆகியோர் உடனிருந்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்