ரூ.3¼ கோடி மதிப்பில் குடிநீர் குழாய்கள் மாற்றி அமைக்கும் பணி தொடக்கம்

திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவில் மாடவீதியில் சிமெண்டு சாலை அமைப்பதற்காக ரூ.3¼ ேகாடியில் குடிநீர் குழாய்கள் மாற்றி அமைக்கும் பணி தொடங்கியது.

Update: 2023-01-19 11:12 GMT

திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவில் மாடவீதியில் சிமெண்டு சாலை அமைப்பதற்காக ரூ.3¼ ேகாடியில் குடிநீர் குழாய்கள் மாற்றி அமைக்கும் பணி தொடங்கியது.

சிமெண்டு சாலை

திருவண்ணாமலையில் உலக பிரசித்தி பெற்ற அருணாசலேஸ்வரர் கோவில் உள்ளது. இக்கோவிலை சுற்றி தேரோடும் மாடவீதியில் சிமெண்டு சாலை அமைக்கப்படும் என்று சட்டமன்றத் தேர்தலின் போது தமிழக முதல்- அமைச்சர் மு.க.ஸ்டாலின் வாக்குறுதி அளித்தார்.

அதனைத்தொடர்ந்து தற்போது அருணாசலேஸ்வரர் கோவில் சுற்றியுள்ள மாட வீதியில் முதற்கட்டமாக பே கோபுரத் தெரு, பெரிய தெருவில் நெடுஞ்சாலைத்துறை மூலம் சிமெண்டு சாலை அமைப்பதற்கான பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.

இதற்காக பக்க கால்வாய்கள் அமைக்கும் பணிகள் நடைபெற்றது.

குடிநீர் குழாய்கள்

அதன் தொடர்ச்சியாக பழைய குடிநீர் குழாய்களை மாற்றி புதிதாக குடிநீர் குழாய்கள் அமைக்கப்பட உள்ளது. இந்த நிலையில் இன்று குழாய்கள் மாற்றி அமைக்கும் பணி தொடங்கியது.

இதன் மூலம் ரூ.3 கோடியே 17 லட்சம் மதிப்பில் நகராட்சி நிர்வாகத்தின் மூலம் பே கோபுரம் தெரு மற்றும் பெரிய தெருவில் நகராட்சிக்கு சொந்தமான குடிநீர் குழாய்கள் மாற்றி புதிதாக இரும்பு குழாய்கள் அமைக்கப்பட உள்ளது.

இந்த பணிகள் தொடக்க நிகழ்ச்சிக்கு திருவண்ணாமலை நகரமன்ற தலைவர் நிர்மலா வேல்மாறன் தலைமை தாங்கினார். நகராட்சி ஆணையாளர் முருகேசன் முன்னிலை வகித்தார்.

சிறப்பு அழைப்பாளராக மாநில தடகள சங்க துணை தலைவர் டாக்டர் எ.வ.வே.கம்பன் கலந்து கொண்டு புதிய குடிநீர் குழாய்கள் அமைக்கும் பணிகளை தொடங்கி வைத்தார்.

நிகழ்ச்சியில் தி.மு.க. நகரச் செயலாளர் கார்த்திவேல்மாறன், நெடுஞ்சாலைத்துறை கோட்ட பொறியாளர் முரளி, உதவி கோட்ட பொறியாளர் ரகுராமன், பொறியாளர் நீலேஸ்வர், உதவி பொறியாளர் ரவி மற்றும் நகர மன்ற உறுப்பினர்கள், முக்கிய பிரமுகர்கள் என பலர் கலந்து கொண்டனர்.

முடிவில் அருணை கன்ஸ்ட்ரக்ஷன் உரிமையாளர் துரை. வெங்கட் நன்றி கூறினார்.

Tags:    

மேலும் செய்திகள்