4 இடங்களில் சமையல் கூடம் கட்டும் பணி

காலை சிற்றுண்டி வழங்கும் திட்டத்திற்காக 4 இடங்களில் சமையல் கூடம் கட்டும் பணி நடந்து வருகிறது.

Update: 2023-05-14 00:30 GMT

வால்பாறை

தமிழகத்தில் அரசு பள்ளிகளில் காலை சிற்றுண்டி வழங்கும் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. அதன்படி, வால்பாறை நகராட்சியில் அடுத்த ஜூன் மாதம் முதல் திட்டம் செயல்படுத்தப்படுகிறது. 62 மையங்களில் 1,250 பள்ளி மாணவ-மாணவிகளுக்கு காலை சிற்றுண்டி வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது. இதற்காக வால்பாறை அரசு மேல்நிலைப்பள்ளி வளாகம், வாட்டர் பால்ஸ் அரசு உயர்நிலைப்பள்ளி வளாகம், சோலையாறு அணை அரசு மேல்நிலைப் பள்ளி வளாகம், உருளிக்கல் எஸ்டேட் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி வளாகம் ஆகிய 4 இடங்களில் சமுதாய சமையல் கூடம் தலா ரூ.36 லட்சம் செலவில் கட்டப்பட்டு வருகிறது. கோடை விடுமுறைக்கு பிறகு பள்ளிக்கூடங்களில் காலை சிற்றுண்டி திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது. புதிதாக கட்டப்பட்டு வரும் சமுதாய சமையல் கூடங்களில் தயாரிக்கப்படும் காலை சிற்றுண்டி, அந்தந்த சமையல் கூடத்திற்கு அருகே உள்ள பள்ளிகளுக்கு கொண்டு சென்று வழங்கப்படும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர். 

Tags:    

மேலும் செய்திகள்