ஏ.நாகூர் ஊராட்சியில் கான்கிரீட் சாலை அமைக்கும் பணி

ஏ.நாகூர் ஊராட்சியில் கான்கிரீட் சாலை அமைக்கும் பணி

Update: 2023-01-01 18:45 GMT

நெகமம்

பொள்ளாச்சி வடக்கு ஒன்றியம், ஏ.நாகூர் ஊராட்சியில் ஆதிதிராவிடர் காலனியில் உள்ள மயானத்திற்கு செல்லும் வழிக்கு ஒன்றியக்குழு உறுப்பினர் நிதியில் இருந்து ரூ.3 லட்சம் செலவில் கான்கிரீட் சாலை அமைக்கும் பணிக்கு பூமி பூஜை நடைபெற்றது. இதில் ஒன்றிய கவுன்சிலர் ஜே.கே.நாகராஜ், ஒன்றிய செயலாளர் ஆவலப்பம்பட்டி நடராஜன், ஊராட்சி மன்ற தலைவர் ராதிகாமணி திருமலைசாமி, முன்னாள் ஊராட்சி மன்ற துணை தலைவர்கள் மாணிக்கம், பங்காரு, உறுப்பினர்கள் சுப்பிரமணியம், மந்திரி மற்றும் பொதுமக்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்