வி.மாமாந்தூர் அரசு பள்ளி வளாகத்தில் புதிய வகுப்பறை கட்டிடங்கள் கட்டும் பணி செந்தில்குமார் எம்.எல்.ஏ. தொடங்கி வைத்தார்

வி.மாமாந்தூர் அரசு பள்ளி வளாகத்தில் புதிய வகுப்பறை கட்டிடங்கள் கட்டும் பணியை செந்தில்குமார் எம்.எல்.ஏ. தொடங்கி வைத்தார்.

Update: 2022-11-23 18:45 GMT

சின்னசேலம், 

சின்னசேலம் ஊராட்சி ஒன்றியம் வி.மாமாந்தூர் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி கட்டிடத்தின் மேற்கூரை கடந்த சில மாதங்களுக்கு முன்பு இடிந்து விழுந்து மாணவர்கள் காயமடைந்தனர். அதைத்தொடர்ந்து சேதமடைந்து காணப்பட்ட அப்பள்ளி கட்டிடம் இடித்து அகற்றப்பட்டதோடு, புதிய வகுப்பறை கட்டிடங்கள் கட்ட முடிவு செய்யப்பட்டது. அதன்அடிப்படையில் கள்ளக்குறிச்சி சட்டமன்ற உறுப்பினர் செந்தில்குமார் தனது தொகுதிக்கான மேம்பாட்டு நிதியில் இருந்து வகுப்பறை கட்டிடங்கள் கட்ட ரூ.35 லட்சம் ஒதுக்கீடு செய்தார்.

இதையடுத்து புதிதாக 3 வகுப்பறை கட்டிடங்கள் கட்டும் பணிக்கான பூமி பூஜை நடந்தது. இதையொட்டி பள்ளி வளாகத்தில் நடந்த நிகழ்ச்சிக்கு செந்தில்குமார் எம்.எல்.ஏ. தலைமை தாங்கி, வகுப்பறை கட்டிடங்கள் கட்டும் பணியை தொடங்கி வைத்தார். நிகழ்ச்சியில் முன்னாள் ஒன்றிய குழு தலைவர் ராஜேந்திரன், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் துரைசாமி, வேங்கடசுப்பிரமணி, வட்டார கல்வி அலுவலர் தனபால், பொறியாளர் சித்ரா, ஊராட்சி மன்ற தலைவர் மாயாண்டி, தலைமை ஆசிரியை பொன்னி மற்றும் ஆசிரியர்கள், அலுவலர்கள், பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்