ரூ.6 லட்சத்து 74 ஆயிரத்தில் சிமெண்டு சாலை அமைக்கும் பணி

ரூ.6 லட்சத்து 74 ஆயிரத்தில் சிமெண்டு சாலை அமைக்கும் பணி

Update: 2023-01-09 18:45 GMT

திருவாரூர் கீழகாவாதுகுடி ஊராட்சியில் பல்வேறு வளர்ச்சி பணிகள் நடைபெற்று வருகிறது. இந்தநிலையில் மக்களின் நீண்ட நாள் கோரிக்கையை நிறைவேற்றும் வகையில் அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சி திட்டம் சார்பில் சேந்தமங்கலம் அம்பேத்கர் நகரில் சிமெண்டு சாலை அமைக்க நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது. நேற்று ரூ.6 லட்சத்து 74 ஆயிரம் மதிப்பில் அம்பேத்கர் நகரில் சிமெண்டு சாலை அமைக்கும் பணியினை மாவட்ட ஊராட்சி தலைவர் தலையாமங்கலம் பாலசுப்பிரமணியன், ஒன்றியக்குழு தலைவர் புலிவலம் தேவா ஆகியோர் தொடங்கி வைத்தனர். இதில் வட்டார வளர்ச்சி அலுவலர் பாஸ்கர், ஊராட்சி மன்ற தலைவர் ஜெயலெட்சுமி கலைகோவன், நிர்வாகி அருணாசலம் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்