ரூ.7½ லட்சத்தில் கால்வாய், சிறுபாலம் அமைக்கும் பணி
வேலூரில் ரூ.7½ லட்சத்தில் கால்வாய், சிறுபாலம் அமைக்கும் பணியை கார்த்திகேயன் எம்.எல்.ஏ. ஆய்வுசெய்தார்.
வேலூர் சைதாப்பேட்டை மெயின் பஜாரில் பி.எஸ்.எஸ்.கோவில் தெரு, சுண்ணாம்புக்கார தெரு பகுதியில் சிறுபாலம் அமைக்க வேண்டும் என்று வணிகர்கள் கோரிக்கை வைத்தனர். மேலும் அந்த பகுதியில் மழைநீர், கழிவுநீர் செல்ல கால்வாய் அமைக்க வேண்டும் என்றும் தெரிவித்தனர். அதன்படி ரூ.7½ லட்சம் மதிப்பில் கால்வாய் மற்றும் சிறுபாலம் அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. அந்த பணியை கார்த்திகேயன் எம்.எல்.ஏ. நேற்று பார்வையிட்டு, பணியை விரைந்து முடிக்க அறிவுறுத்தினார்.
முன்னதாக சைதாப்பேட்டை கோடையிடி குப்புசாமி மாநகராட்சி மேல்நிலைப்பள்ளியில் 74 மாணவர்களுக்கு விலையில்லா சைக்கிள்களை அவர் வழங்கினார். நிகழ்ச்சியில் மண்டல குழு தலைவர் நரேந்திரன், கவுன்சிலர்கள் முருகன், சந்திரசேகரன், தலைமை ஆசிரியை பேபி உள்பட பலர் கலந்து கொண்டனர்.