ரூ.43 கோடியில் அடுக்குமாடி குடியிருப்பு கட்டிடம் கட்டும் பணி தீவிரம்

உளுந்தூர்பேட்டையில் ரூ.43 கோடியில் அடுக்குமாடி குடியிருப்பு கட்டிடம் கட்டும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.

Update: 2023-04-20 18:49 GMT

உளுந்தூர்பேட்டை, 

வீடு இல்லாத ஏழை எளிய மக்களுக்கு வழங்குவதற்காக உளுந்தூர்பேட்டையில் கடந்த 2021 -ம் ஆண்டு தமிழ்நாடு குடிசை மாற்று வாரியத்தின் சார்பில் ரூ.42 கோடியை 95 லட்சம் மதிப்பில் 512 வீடுகள் கொண்ட அடுக்குமாடி குடியிருப்பு கட்டிடம் கட்ட முடிவு செய்யப்பட்டது.

இதையடுத்து வீடுகள் கட்டுவதற்காக நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு கட்டிடம் கட்டும் பணி தொடங்கப்பட்டது. தற்போது 90 சதவீதத்துக்கு மேல் கட்டிட பணிகள் முடிக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. இதனால் கட்டிட பணிகள் விரைவில் முடியவுள்ளது. ஏற்கனவே முதல் கட்டமாக முடிக்கப்பட்ட 264 வீடுகளுக்கான பயனாளிகள் தேர்வு செய்யும் பணிகள் தொடங்கி நடைபெற்று வருகிறது.

நடவடிக்கை

இந்த நிலையில் தற்போது கட்டப்பட்டு வரும் 512 வீடுகள் கட்டும் பணி வருகிற ஜூலை மாதத்திற்குள் முடிக்க திட்டமிடப்பட்டுள்ளது. இதையடுத்து பயனாளிகளை தேர்வு செய்து வீடுகளை வழங்க தேவையான நடவடிக்கைகளை அதிகாரிகள் எடுத்து வருகின்றனர். அடுக்குமாடி குடியிருப்பு கட்டிட பணிகள் முழுமையாக விரைவில் முடியவுள்ளதால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். 

Tags:    

மேலும் செய்திகள்