ரூ.14 லட்சத்தில் புதிய சாலை அமைக்கும் பணி
முனைஞ்சிப்பட்டி அருகே ரூ.14 லட்சத்தில் புதிய சாலை அமைக்கும் பணியை ரூபி மனோகரன் எம்.எல்.ஏ. தொடங்கி வைத்தார்.
இட்டமொழி:
முனைஞ்சிப்பட்டி அருகே பார்பரம்மாள்புரத்தில் சட்டமன்ற உறுப்பினர் தொகுதி வளர்ச்சி நிதியில் இருந்து ரூ.14 லட்சத்தில் புதிய பேவர்பிளாக் சாலை அமைக்கும் பணிக்கு அடிக்கல் நாட்டு விழா நேற்று நடந்தது. தமிழக காங்கிரஸ் பொருளாளர் ரூபி மனோகரன் எம்.எல்.ஏ. தலைைம தாங்கி, அடிக்கல் நாட்டி பணிகளை தொடங்கி வைத்தார். விழாவில் பங்குத்தந்தைகள் அமல்ராஜ், கட்லஸ், காங்கிரஸ் தொகுதி பொறுப்பாளர் அழகியநம்பி, மாவட்ட பொதுச்செயலாளர் நம்பித்துரை, துணைத்தலைவர் செல்லப்பாண்டி, வட்டார தலைவர் ரவீந்திரன், முன்னாள் ஒன்றிய கவுன்சிலர் பத்மசிங் செல்வமீரான் உள்பட பலர் கலந்து கொண்டனர்.