ரூ.7½ லட்சத்தில் புதிய ஆழ்துளை கிணறு அமைக்கும் பணி
வெங்குப்பட்டு ஊராட்சியில் ரூ.7½ லட்சத்தில் புதிய ஆழ்துளை கிணறு அமைக்கும் பணி நடைபெற்றது.;
சோளிங்கர்
ராணிப்பேட்டை மாவட்டம் சோளிங்கர் அருகே வெங்குப்பட்டு ஊராட்சிக்கு உட்பட்ட 4 கிராமங்களில் கோடைகாலம் என்பதால் தண்ணீர் பிரச்சினை ஏற்பட்டுள்ளது. இதுகுறித்து ஒன்றிய கவுன்சிலர் ராமனிடம் பொதுமக்கள் கோரிக்கை வைத்தனர். இதைத்தொடர்ந்து எம்.பி.குப்பம், கங்காபுரம், மேல் காலனி, கீழ் காலனி ஆகிய பகுதிகளில் தண்ணீர் பிரச்சினையை போக்க ஒன்றிய நிதியில் இருந்தும், மாவட்டக்குழு நிதியிலிருந்தும் ரூ.7½ லட்சத்தில் புதிய ஆழ்துளை கிணறு அமைக்கும் பணி தொடங்கியது.
இதனை ஒன்றியக்குழு தலைவர் கலைக்குமார் மற்றும் மாவட்ட ஊராட்சிக் குழு துணைத்தலைவர் நாகராஜ் ஆகியோர் ஆய்வு செய்தனர். இப்பணிகள் இன்னும் 2 வாரத்திற்குள் நிறைவுபெறும் என ஒன்றியக்குழு தலைவர் தெரிவித்தார்.
இதில் வெங்கல்பட்டு கிளை செயலாளர் குமார், கிளை நிர்வாகிகள் வீரய்யான், குப்புசாமி, சவுந்தரராஜ், ஸ்வீட் ராஜ், கோகுல், ராமு, சுந்தரமூர்த்தி மற்றும் பலர் உடனிருந்தனர்.