தேனுபுரீஸ்வரர் கோவிலுக்கு ரூ.87 லட்சத்தில் புதிய தேர் கட்டும் பணி

பட்டீஸ்வரம் தேனுபுரீஸ்வரர் கோவிலுக்கு ரூ.87 லட்சத்தில் புதிய தேர் கட்டும் பணியை கல்யாண சுந்தரம் எம்.பி. தொடங்கி வைத்தார்.

Update: 2023-04-23 20:22 GMT

கும்பகோணம்:

பட்டீஸ்வரம் தேனுபுரீஸ்வரர் கோவிலுக்கு ரூ.87 லட்சத்தில் புதிய தேர் கட்டும் பணியை கல்யாண சுந்தரம் எம்.பி. தொடங்கி வைத்தார்.

தேனுபுரீஸ்வரர் கோவில்

கும்பகோணத்தை அடுத்த பட்டீஸ்வரத்தில் உள்ளது தேனுபுரீஸ்வரர் கோவில். இக்கோவிலில் உள்ள துர்க்கை அம்மனை வழிபட ஆடி மாதத்தில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் பட்டீஸ்வரம் கோவிலுக்கு வருவது வழக்கம்.

இவ்வாறு பல்வேறு சிறப்பு பெற்ற தேனுபுரீஸ்வரர் கோவிலுக்கு ரூ.87 லட்சத்தில் புதிய தேர் செய்ய முடிவு செய்யப்பட்டது.

புதிய தேர் கட்டும் பணி

இதை தொடர்ந்து நேற்று புதிய தேர் கட்டும் பணி தொடக்க விழா நடைபெற்றது. விழாவில் கோவில் செயல் அலுவலர் ஆறுமுகம் வரவேற்றார். கல்யாண சுந்தரம் எம்.பி. கலந்து கொண்டு தேர் கட்டும் பணியை தொடங்கி வைத்தார்.

இதுகுறித்து அறநிலையத்துறை அதிகாரிகள் கூறுகையில்,

தேனுபுரீஸ்வரர் கோவிலுக்கு புதிய தேர் செய்வதென முடிவு செய்யப்பட்டு ரூ.87 லட்சம் நிதி ஒதுக்கப்பட்டு, தேர் கட்டும் பணிகள் தொடங்கப்பட்டுள்ளன.

40 டன் எடை

40 டன் எடையில் இந்த தேர் தயாரிக்கப்பட உள்ளது. இந்த பணி இரண்டு ஆண்டுகளில் முடிவு பெற்று 2025-ம் ஆண்டு நடைபெற உள்ள வைகாசி உற்சவத்தின் போது தேரோட்டம் நடைபெறும்.இதற்காக செம்பனார் கோவில் பகுதியைச் சேர்ந்த முருகன் ஸ்தபதி தலைமையில் குழு அமைக்கப்பட்டு இப்பணி நடைபெறும் என்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்