தென்பெண்ணை ஆற்றின் குறுக்கே ரூ.16 கோடியில் மேம்பாலம் கட்டும் பணி

தண்டராம்பட்டு அருகே தென்பெண்ணை ஆற்றின் குறுக்கே ரூ.16 கோடியில் மேம்பாலம் கட்டும் பணியை எம்.பி., எம்.எல்.ஏ. தொடங்கி வைத்தனர்.

Update: 2023-03-02 15:57 GMT

தண்டராம்பட்டு அருகே தென்பெண்ணை ஆற்றின் குறுக்கே ரூ.16 கோடியில் மேம்பாலம் கட்டும் பணியை எம்.பி., எம்.எல்.ஏ. தொடங்கி வைத்தனர்.

16 கோடியில் மேம்பாலம்

திருவண்ணாமலை மாவட்டம் தண்டராம்பட்டை அடுத்த தொண்டமானூர் ஊராட்சியில் 3 ஆயிரத்துக்கு மேற்பட்டோர் வசித்து வருகின்றனர். இவர்கள் தண்டராம்பட்டு வழியாக திருவண்ணாமலைக்கு வர வேண்டும் என்றால் கள்ளக்குறிச்சி மாவட்டம் மூங்கில்துறைப்பட்டு வழியாக 10 கிலோ மீட்டர் சுற்றி வந்ததால்தான் ஊரில் இருந்து வெளியே வர முடியும். இதனால் தென்பெண்ணை ஆற்றின் குறுக்கே மேம்பாலம் கட்ட வேண்டும் என்று பலமுறை கலெக்டர், எம்.எல்.ஏ., எம்.பி.யிடம் கிராம பொதுமக்கள் மனு அளித்தனர். அதைத் தொடர்ந்து மேம்பாலம் கட்டுவதற்காக நபார்டு வங்கி நிதி உதவியுடன் ரூ.16 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது.

பணிகள் தொடங்கியது

இதனையடுத்து மேம்பாலம் கட்டுவதற்கான பணிகளை மு.பெ.கிரி எம்.எல்.ஏ., சி.என்.அண்ணாதுரை எம்.பி. ஆகியோர் பூமி பூஜை செய்து தொடங்கி வைத்தனர்.

நிகழ்ச்சியில் தாசில்தார் அப்துல் ரகுப், ஒன்றிய செயலாளர் கோ.ரமேஷ், ஒன்றியக்குழு தலைவர் பரிமளா கலையரசன், ஒன்றிய துணை செயலாளர் எல்.ஐ.சி. வேலு, உதவி பொறியாளர் சந்தியா, ஊராட்சி மன்ற தலைவர்கள் குணசேகரன், செல்வி, ஒன்றிய கவுன்சிலர்கள் கார்த்திக், கௌதமி, அறங்காவலர் குழு தலைவர் மகேஸ்வரன், துணைத்தலைவர் வீரபத்திரன், கிராம நிர்வாக அலுவலர் ஜெயமணி மற்றும் அரசு அலுவலர்கள், கட்சி நிர்வாகிகள் பலர் கலந்துகொண்டனர்.

ஆற்றில் நடந்து வந்த எம்.பி., எம்.எல்.ஏ.

முன்னதாக ேமம்பால பணிகள் தொடங்கி வைப்பதற்காக சி.என்.அண்ணாதுரை எம்.பி., மு.பெ.கிரி எம்.எல்.ஏ. மற்றும் கட்சி நிர்வாகிகள், பொதுமக்கள் ஆற்று தண்ணீரில் நடந்து வந்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்