கார் மோதி கட்டிட காண்டிராக்டர் பலி
தூத்துக்குடியில் மோட்டார் சைக்கிள் மீது கார் மோதி கட்டிட காண்டிராக்டர் பலியானார்.
தூத்துக்குடி அந்தோணியார்புரத்தைச் சேர்ந்தவர் அந்தோணி துரைராஜ் (வயது 33). கட்டிட கான்டிராக்டர். இவர், கடந்த 3-ந் தேதி இரவு வேலை முடித்து விட்டு, மோட்டார் சைக்கிளில் வீட்டுக்கு திரும்பி வந்து கொண்டு இருந்தார். அவர் அந்தோணியார்புரத்தில் ரோட்டை கடக்க முயன்ற போது, அந்த வழியாக வந்த கார், மோட்டார் சைக்கிள் மீது மோதியது. இதில் பலத்த காயம் அடைந்த அவர் பரிதாபமாக இறந்தார். இது குறித்த புகாரின் பேரில் புதுக்கோட்டை போலீஸ் இன்ஸ்பெக்டர் வின்சென்ட் அன்பரசி வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.