காங்கிரஸ் போட்டியிடும் தொகுதிகளை 2 நாளில் முடிவு செய்வோம் - செல்வப்பெருந்தகை

கடந்த முறை போட்டியிட்ட பெரும்பாலான தொகுதிகளில் போட்டியிடுவோம் என செல்வப்பெருந்தகை தெரிவித்தார்.

Update: 2024-03-14 10:21 GMT

சென்னை,

தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை சென்னை சத்தியமூர்த்தி பவனில் இன்று நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது,

கடந்த முறை காங்கிரஸ் போட்டியிட்ட பெரும்பாலான தொகுதிகளில் போட்டியிடுவோம். ஒரு சில தொகுதிகள் மாற வாய்ப்பு உள்ளது.தி.மு.க.வுடன், கூட்டணி தொகுதி ஒதுக்கீடு உடன்பாடு இன்னும் 2 நாட்களில் முடிவடையும். தேர்தலில் போட்டியிட புதிய முகங்களுக்கு வாய்ப்பு வழங்குவது பற்றி தேசிய தலைமை முடிவு செய்யும்.

தேர்தல் தேதி அறிவிக்கப்படுவது தள்ளிக்கொண்டே போகிறது. இதுபற்றி பிரதமர் மோடிக்கு கவலை இல்லை. அவரது கவலையெல்லாம் பாசிச ஆட்சி நடத்துவது பற்றிதான். எனவே பொதுமக்கள், மாணவர்களுக்கு பாதிப்பு இல்லாமல் தேர்தல் நடத்தப்பட வேண்டும். பிரதமர் மோடி தமிழகத்துக்கு அடிக்கடி வருகிறார். அப்போது அந்த மேடைகளில் அவர் தமிழகத்துக்கு செய்த திட்டங்களை பற்றி குறிப்பிடாதது ஏன்?முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலின் தமிழக மக்களுக்கு செய்த திட்டங்களை வெளிப்படையாக சொல்கிறார். ஆனால் மோடி அவ்வாறு சொல்லவில்லை. எனவே தமிழக மக்களுக்கு மத்திய அரசு என்ன செய்தது என்பதை பிரதமர் மோடி பட்டியலிட வேண்டும். என தெரிவித்தார்.

Tags:    

மேலும் செய்திகள்