காவலர்களுக்கு மன அழுத்தத்தை குறைக்க போதிய ஓய்வு கொடுக்க வேண்டும்: எடப்பாடி பழனிசாமி

அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார்.

Update: 2023-07-08 08:48 GMT

தூத்துக்குடி,

தூத்துக்குடி விமான நிலையத்தில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறுகையில்,

டிஐஜி விஜயகுமார் நேர்மையான, திறமையான அதிகாரி. அவருக்கு 6 மாதம் மன அழுத்தம் இருந்ததாக கூறப்படுகிறது. மன அழுத்தத்தால் பாதிக்கப்பட்டிருந்த விஜயகுமாரை பணியில் தொடர அனுமதித்தது ஏன்?

காவலர்களுக்கு ஏற்படும் மன அழுத்தத்தை குறைக்க அதிமுக அரசு நடவடிக்கை எடுத்தது. காவலர்களுக்கு மன அழுத்தத்தை குறைக்க போதிய ஓய்வு கொடுக்க வேண்டும். காவல்துறை உயரதிகாரிகளின் மன அழுத்தத்தை குறைக்கவும் நடவடிக்கை தேவை.

டிஐஜி விஜயகுமார் தற்கொலை தொடர்பாக சிபிஐ விசாரணை தேவை. காவலர் நலவாழ்வு திட்டத்தை அரசு மீண்டும் செயல்படுத்த வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.

 

Tags:    

மேலும் செய்திகள்