கெங்கையம்மன் கோவிலில் புதிய கொடிமரம் பிரதிஷ்டை
குடியாத்தம் கெங்கையம்மன் கோவிலில் புதிய கொடிமரம் பிரதிஷ்டை செய்யப்பட்டது.
குடியாத்தம் கெங்கையம்மன் கோவிலில் 27 ஆண்டுகளுக்கு முன்பாக கொடிமரம் பிரதிஷ்டை செய்யப்பட்டது. அதனை தொடர்ந்து தற்போது புதிதாக 36 அடி உயரத்தில் கொடிமரம் செய்யப்பட்டு நேற்று அந்த கொடி மரத்திற்கு சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டது. தொடர்ந்து கொடிமரம் பிரதிஷ்டை செய்யப்பட்டது. நிகழ்ச்சியை முன்னிட்டு மூலவர் கெங்கையம்மன் சிறப்பு வெள்ளி கவச அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள் பாலித்தார்.
நிகழ்ச்சியில் இந்து சமய அறநிலைத்துறை வேலூர் துணை ஆணையர் க.ரமணி, நகரமன்ற உறுப்பினர் தேவகி கார்த்திகேயன் உள்பட ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர். தொடர்ந்து அன்னதானம் வழங்கப்பட்டது. இதற்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாக அதிகாரி திருநாவுக்கரசு, நாட்டாண்மை ஆர்.ஜி.சம்பத், தர்மகத்தா கே.பிச்சாண்டி, திருப்பணி குழு தலைவர் ஆர்.ஜி.எஸ். கார்த்திகேயன் மற்றும் விழாக் குழுவினர், இளைஞர்கள், பொதுமக்கள் செய்திருந்தனர்.