நடராஜர் விநாயகர் சிலை பிரதிஷ்டை

10 ஆயிரத்து 8 ருத்ராட்சைகளால் அலங்கரிக்கப்பட்ட நடராஜர் விநாயகர் சிலை பிரதிஷ்டை செய்யப்பட்டது.

Update: 2023-09-17 20:00 GMT

இன்று (திங்கட்கிழமை) விநாயகர் சதுர்த்தி கொண்டாடப்பட உள்ளது. கும்பகோணத்தில் உள்ள அகில பாரத இந்து மகா சபா ஆலய பாதுகாப்பு பிரிவு சார்பில் விநாயகர் சிலை அமைக்கபட்டுள்ளது. கம்பு, கேழ்வரகு உள்ளிட்ட நவதானியங்களில் 10ஆயிரத்து 8 ருத்ராட்சைகளால் அலங்கரிக்கப்பட்டு நடராஜர் வடிவில் விநாயகர் சிலை உருவாக்கப்பட்டுள்ளது. இந்த சிலையில் விநாயகர் ஒரு கையில் திரிசூலமும், மறுகையில் உடுக்கையுடன் நின்ற கோலத்தில் நடராஜர் ரூபத்தில் காட்சி அளிக்கிறார். இந்த விநாயகர் சிலையானது கும்பகோணத்தில் உள்ள கர்ண கொல்லை தெருவில் இன்று காலை பிரதிஷ்டை செய்யப்பட உள்ளது. விநாயகர் விசர்ஜனம் செய்யப்படும்போது ருத்ராட்சைகள் பிரிக்கப்பட்டு பக்தா்களுக்கு வழங்கப்பட உள்ளது என்று இந்து மகா சபா ஆலய பாதுகாப்பு பிரிவினர் தெரிவித்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்