பரிசுத்த திரித்துவ ஆலய பிரதிஷ்டை பண்டிகை தொடங்கியது

பரப்பாடி பரிசுத்த திரித்துவ ஆலய பிரதிஷ்டை பண்டிகை தொடங்கியது.

Update: 2022-10-16 20:23 GMT

இட்டமொழி:

பரப்பாடி பரிசுத்த திரித்துவ ஆலய பிரதிஷ்டை பண்டிகை தொடங்கியது.

பரிசுத்த திரித்துவ ஆலயம்

நெல்லை திருமண்டலத்தில் பிரசித்தி பெற்ற கிறிஸ்தவ ஆலயங்களில் ஒன்றான பரப்பாடி பரிசுத்த திரித்துவ ஆலயம் புதிதாக கட்டப்பட்டு பிரதிஷ்டை விழா மற்றும் அசன பண்டிகை நேற்று முன்தினம் தொடங்கியது. அன்று மாலையில் மதுரை இயேசு மறவார் ஊழியங்கள் போதகர் டென்சிங் டேனியல் தலைமையில் நற்செய்தி கூட்டம் நடந்தது. சிறப்பு பாடல்கள் பாடப்பட்டன. இதில் திரளான கிறிஸ்தவர்கள் கலந்து கொண்டு பிரார்த்தனை செய்தனர்.

நேற்று காலையில் பரிசுத்த திருவிருந்து ஆராதனை, வேதாகம தேர்வு, நற்செய்தி கூட்டம் நடைபெற்றது. இன்று (திங்கட்கிழமை) சமையல் போட்டி, விளையாட்டு போட்டிகள், பிளசிங் குழுவினரின் இன்னிசை நிகழ்ச்சிகள் நடைபெறுகிறது.

நாளை, பிரதிஷ்டை ஆராதனை

பிரதான பண்டிகையான புதிய ஆலய பிரதிஷ்டை ஆராதனை நாளை (செவ்வாய்க்கிழமை) காலை 9.30 மணிக்கு நடைபெறுகிறது. இதில் நெல்லை திருமண்டல பேராயர் ஏ.ஆர்.ஜி.எஸ்.டி.பர்னபாஸ் கலந்துகொண்டு புதிய ஆலயத்தை பிரதிஷ்டை செய்கிறார். தொடர்ந்து அசனவிழா நடைபெறுகிறது. இரவில் ஸ்ரீவைகுண்டம் சேகர குரு எம்.எஸ்.ஜே.வேதநாயகம் பஜனை பிரசங்கம் நடைபெறுகிறது.

விழாவையொட்டி புதிய ஆலயம், கோபுரம் மற்றும் பரப்பாடியில் உள்ள சாலைகள், தெருக்கள் முழுவதும் மின்விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டுள்ளது. விழா ஏற்பாடுகளை சேகர தலைவர் பி.கிறிஸ்டோபர் தவசிங், சேகர குரு எஸ்.ஆபிரகாம் அருள்ராஜா, சபை ஊழியர் பி.கிறிஸ்டோபர் கிங், சேகர செயலர் எம்.பொன்னுத்துரை, பொருளாளர் வி.சீலன் மற்றும் சபை மக்கள் செய்துள்ளனர்.

Tags:    

மேலும் செய்திகள்