தாளவாடி பகுதியில் 21 இடங்களில் விநாயகர் சிலைகள் பிரதிஷ்டை; நாளை ஆற்றில் கரைக்கப்படுகிறது

தாளவாடி பகுதியில் 21 இடங்களில் விநாயகர் சிலைகள் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளன. இவை நாளை (செவ்வாய்க்கிழமை) ஆற்றில் கரைக்கப்படுகிறது.;

Update: 2023-09-17 20:59 GMT

தாளவாடி

தாளவாடி பகுதியில் 21 இடங்களில் விநாயகர் சிலைகள் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளன. இவை நாளை (செவ்வாய்க்கிழமை) ஆற்றில் கரைக்கப்படுகிறது.

9 அடிஉயர விநாயகர்

நாடு முழுவதும் இன்று (திங்கட்கிழமை) விநாயகர் சதுர்த்தி விழா கொண்டாடப்படுகிறது. அதேபோல் ஈரோடு மாவட்டத்திலும் கொண்டாடப்பட உள்ளது. இதையொட்டி விநாயகர் சிலைகள் வைத்து பொதுமக்கள் வழிபட்டு வருகின்றனர்.

அதன்படி தாளவாடியில் இந்து முன்னணி சார்பில் நேற்று தாளவாடி பஸ் நிலையம் அருகில் 9 அடி உயரமுள்ள விநாயகர் சிலை பிரதிஷ்டை செய்யப்பட்டது. பின்னர் பூஜைகள் செய்து வழிபட்டனர்.

20 இடங்கள்

அதேபோல் அண்ணாநகர், சேஷன்நகர், கனகதாசர் வீதி, பூஜேகவுடர் வீதி, ஆசனூர், ஒசூர், இரிபுரம், ஒசூர் ரோடு, சிக்கள்ளி என 20 இடங்களில் விநாயகர் சிலைகளை பிரதிஷ்டை செய்து வழிபட்டனர். தாளவாடி பகுதியில் மொத்தம் 21 இடங்களில் விநாயகர் சிலைகள் வைக்கப்பட்டுள்ளன. இவை அனைத்தும் நாளை (செவ்வாய்க்கிழமை) மாலை ஊர்வலமாக எடுத்து செல்லப்பட்டு தலமலை ரோட்டில் உள்ள ஆற்றில் கரைக்கப்படுகிறது.

Tags:    

மேலும் செய்திகள்