உப்பூர் வெயிலுகந்த விநாயகர் கோவிலில் 30 ஆண்டுகளுக்கு பிறகு கும்பாபிஷேகம்

3 ஆயிரம் ஆண்டுகள் பழமையான உப்பூர் வெயிலுகந்த விநாயகர் கோவிலில் 30 ஆண்டுகளுக்கு பிறகு கும்பாபிஷேகம் நடந்தது. இதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்று சாமி தரிசனம் செய்தனர்.

Update: 2023-06-08 18:45 GMT

ஆர்.எஸ்.மங்கலம், 

3 ஆயிரம் ஆண்டுகள் பழமையான உப்பூர் வெயிலுகந்த விநாயகர் கோவிலில் 30 ஆண்டுகளுக்கு பிறகு கும்பாபிஷேகம் நடந்தது. இதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்று சாமி தரிசனம் செய்தனர்.

பழமையான கோவில்

ஆர்.எஸ்.மங்கலம் தாலுகாவில் ராமநாதபுரம் சமஸ்தான மற்றும் தேவஸ்தான தர்மகர்த்தா ராணி பிரம்ம ராஜேஸ்வரி நாச்சியாருக்கு பாத்தியப்பட்ட உப்பூர் வெயில் உகந்த விநாயகர் கோவில் உள்ளது. 3 ஆயிரம் ஆண்டுகள் பழமையான கோவிலில் உள்ள வெயில் உகந்த விநாயகரை ராமபிரான் சீதையை மீட்க இலங்கைக்கு செல்லும் வழியில் பூஜித்து சென்றதாக ராமாயண புராணத்தில் கூறப்பட்டுள்ளது.

மிக பழமையான இந்த கோவிலில் விநாயகர் வேண்டியவருக்கு வேண்டிய வரத்தை அளிப்பதாக பக்தர்களின் நம்பிக்கை. மிகவும் பிரசித்திபெற்ற இக்கோவிலின் முன்புறம் மணி மண்டபம் சில லட்சங்கள் மதிப்பீட்டில் பிரமாண்டமாக கட்டி எழுப்பப்பட்டு மிகவும் பழமை வாய்ந்த இந்த கோவிலில் 30 ஆண்டுகளுக்கு பிறகு நேற்று கும்பாபிஷேக விழா நடைபெற்றது.

கும்பாபிஷேகம்

விழா கடந்த 5-ந் தேதி முதல்கால யாக பூஜையுடன் தொடங்கியது. முக்கிய நிகழ்ச்சியாக நேற்று காலை 7.45 மணிக்கு 6-ம் கால யாக பூஜை தொடங்கி நடைபெற்றது. தொடர்ந்து காலை 9.45 மணிக்கு மகாபூர்ணகுதி நடைபெற்று 10.45 மணிக்கு மேல் கடம் புறப்பாடு நிகழ்ச்சியும் நடைபெற்றது. புரோகிதர்கள் வேத மந்திரங்கள் முழங்க, கருடன் வானில் வட்டமிட காலை 11.20 மணிக்கு ராமநாதபுரம் சமஸ்தானம் தேவஸ்தானம் பரம்பரை தர்மகர்த்தா ராணி பிரம்மகிருஷ்ண ராஜேஸ்வரி நாச்சியார், ராமநாதபுரம் ராஜா நாகநாத சேதுபதி, தேவகோட்டை ஜமீன்தார் நாராயணன் செட்டியார், திவான் பழனிவேல் பாண்டியன், உப்பூர் முன்னாள் கிராம நிர்வாக அலுவலர் கிருஷ்ணன், குமரய்யா அம்பலம், விழா கமிட்டிளர் முன்னிலையில் கோவிலின் ராஜகோபுரம், விமானம் மற்றும் உப சன்னதிகளின் கலசங்களிலும் ஒரே நேரத்தில் புனித நீர் ஊற்றப்பட்டு கும்பாபிஷேகம் நடந்தது. மத நல்லிணத்துக்கு எடுத்துக்காட்டாக இந்த விழாவில் இஸ்லாமிய சமூகத்தை சேர்ந்தவர்கள் திரளாக பங்கேற்றனர்.

சிறப்பு அபிஷேகம்

மாலை 5 மணிக்கு சிறப்பு அபிஷேகம், விநாயகர், சித்தி, புத்தி தெய்வங்களுடன் திருக்கல்யாண நிகழ்ச்சியும், சாமி வீதிஉலாவும் நடந்தது. தொடர்ந்து உலக நன்மைக்காக விநாயகருக்கு சிறப்பு அபிஷேகம், தீபாராதனை நடைபெற்றது. விழா ஏற்பாட்டை விழா கமிட்டியினர் செய்திருந்தனர். நிகழ்ச்சியில் ராமநாதபுரம் எம்.எல்.ஏ. காதர் பாட்ஷா முத்துராமலிங்கம், திருவாடானை எம்.எல்.ஏ. கரு.மாணிக்கம், ராமநாதபுரம் மாவட்ட டி.ஐ.ஜி. துரை, மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு தங்கதுரை, முன்னாள் அமைச்சர் வ.து.நடராஜன், வெட்டுக்குளம் வாசுதேவன் அம்பலம், வெயில் உகந்த விநாயகர் ஐயப்ப பக்தர்கள் குழு குருசாமி துரைராஜ், தி.மு.க. ஆர்.எஸ்.மங்கலம் தெற்கு பகுதி ஒன்றிய செயலாளர் மோகன், உகந்தான்குடி ராமநாதன், கடலூர் முன்னாள் ஊராட்சி தலைவர் குஞ்சரம் கிருஷ்ணன், உப்பூர் செந்தில்குமார், முத்துக்குமார், ரவிக்குமார், கணேசன் அம்பலம், ஆர்.எஸ்.மங்கலம் முன்னாள் பேரூராட்சி கவுன்சிலர் கந்தசாமி, கடலூர் ஊராட்சி தலைவர் முருகவள்ளி பாலன், துணை தலைவர் சேவியர், ஊராட்சி உறுப்பினர்கள் பாண்டித்துரை, தமிழரசி, வைரம்பாள், மஞ்சுளா, கலைஞர் ராணி, ராஜேஸ்வரி இளங்கோவன், அழகப்பன், ஊராட்சி செயலர் அந்தோணிசாமி, ஸ்ரீ அமிர்தா மெட்ரிகுலேஷன் பள்ளி தாளாளர் அன்புமலர் பாண்டியன், எல்.ஐ.சி. முகவர் ரவீந்திரன், தனமதிவாணன், ராமநாதன், காந்தி, வைரவன், எம்.எஸ்.உணவாக உரிமையாளர் கணேசன், முருகானந்தம், கார்த்திக்ராஜா, சசிவர்ணம், விசுவநாதன், முருகன் பூசாரி, செல்வம் மற்றும் மாவட்டத்தின் பல்வேறு ஊர்களில் இருந்தும், வெளி மாவட்டங்களில் இருந்தும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். விழாவையொட்டி பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு தங்கதுரை உத்தரவின் பேரில் ஏராளமான போலீசார் மற்றும் ஊர்க்காவல் படையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர். 

Tags:    

மேலும் செய்திகள்