செல்வவிநாயகர் கோவில் கும்பாபிஷேகம்

கட்டமராபாளையத்தில் செல்வவிநாயகர் கோவில் கும்பாபிஷேகம் நடைபெற்றது.

Update: 2023-01-29 19:01 GMT

மோகனூர்

மோகனூர் ஒன்றியம், ஓலப்பாளையம் ஊராட்சி கட்டமராபாளையத்தில் உள்ள செல்வ விநாயகர், சித்தி விநாயகர், பால விநாயகர், பாலமுருகன், கொங்களம்மன், குப்பாயிஅம்மன், முத்தாயிஅம்மன், கருப்பணார் கோவில் கும்பாபிஷேகம் நடைபெற்றது. விழாவையொட்டி கடந்த 26-ந் தேதி காலை மங்கல இசையுடன் தொடங்கி, விநாயகர் வழிபாடு புண்யாகம், பஞ்சகவ்யம் கணபதி ஹோமம், மகாலட்சுமி யாகம் உள்பட பல்வேறு பூஜைகள் நடைபெற்றது. தொடர்ந்து பக்தர்கள் காவிரி ஆற்றில் இருந்து தீர்த்தம் எடுத்து வந்தனர், முளைப்பாரி அழைத்து வரப்பட்டது. மாலை 6 மணிக்கு மங்கள இசையுடன்தொடங்கி, வாஸ்து பூமி பூஜை, அங்குரம், ரஷாபந்தனம், கும்பலங்காரம், முதல் கால யாக பூஜையும், கோபுர கலசம் வைத்தல், மருந்து சாத்துதலும் நடைபெற்றது. 27-ந் தேதி (வெள்ளிக்கிழமை) காலை 6 மணிக்கு மங்கள இசை உடன் தொடங்கி விநாயகர் வழிபாடுடன், 2-ம் கால யாக பூஜை, தீபாராதனை நடைபெற்றது. தொடர்ந்து 6 மணிக்கு மேல் 7.30 மணிக்குள் சித்தி விநாயகர் கோவில், செல்வ விநாயகர் கோவில் விமான கோபுரம், அனைத்து மும்மூர்த்திகள், மூலமூர்த்திகள் கும்பாபிஷேகம் நடைபெற்றது. உடன் தசதானம், தச தரிசனம், கோ பூஜை நடைபெற்று பிரசாதம் வழங்கப்பட்டது. இதில் சுற்று வட்டாரத்தை சேர்ந்த ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்கள். 2 நாட்களும் அன்னதானம் நடைபெற்றது. விழாவிற்கான ஏற்பாடுகளை கட்டமராபாளையம் ஊர் பொதுமக்கள் செய்திருந்தனர். விழாவில் கலந்து கொண்ட பக்தர்களுக்கு மரக்கன்றுகள், தென்னங்கன்றுகள் வழங்கப்பட்டன.

Tags:    

மேலும் செய்திகள்