கூம்பு வடிவ ஒலிபெருக்கி பறிமுதல்
கூம்பு வடிவ ஒலிபெருக்கியை பறிமுதல் செய்து ஒருவரை கைது செய்தனர்.
சிவகாசி,
சிவகாசி டவுன் சப்-இன்ஸ்பெக்டர் கருத்தப்பாண்டி மற்றும் போலீசார் விஸ்வநத்தம் பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது அங்குள்ள காளியம்மன் கோவில் அருகில் வசித்து வரும் மாடசாமி (வயது 50) என்பவர் தடை செய்யப்பட்ட கூம்புவடிவ ஒலிபெருக்கியை பயன்படுத்தி பொதுமக்களுக்கு இடையூறு செய்தது தெரியவந்தது. இதை தொடர்ந்து அவரை கைது செய்த போலீசார் கூம்புவடிவ ஒலிபெருக்கியை பறிமுதல் செய்தனர்.