ரெயில் நிலையத்தை முற்றுகையிட முயன்ற காங்கிரஸ் கட்சியினர்

பிரதமர் வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்து அரக்கோணம் ரெயில் நிலையத்தை காங்கிரஸ் கட்சியினர் முற்றுகையிட முயன்றனர்.;

Update: 2023-04-08 17:45 GMT

சென்னை - கோவை இடையேயான 11-வது வந்தே பாரத் ரெயில் சேவையை பிரதமர் மோடி நேற்று சென்னையில் கொடியசைத்து தொடங்கி வைத்தார். இதனையடுத்து அரக்கோணம் வந்த வந்தே பாரத் ரெயிலை அரக்கோணம் ரெயில் பயணிகள் சங்க நிர்வாகிகள் மற்றும் பா.ஜ.க.வினர் மலர் தூவி வரவேற்றனர். தொடர்ந்து ரெயில் நிலையத்தில் இருந்த பயணிகளுக்கு இனிப்புகள் வழங்கினர்.

இதனிடையே பிரதமர் மோடியின் வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்து தமிழக காங்கிரஸ் கட்சி சார்பில் கருப்பு கொடி போராட்டம் நடத்தப்படும் என்று தலைவர் கே.எஸ். அழகிரி அறிவித்திருந்தார். அதன்படி அரக்கோணம் ரெயில் நிலையத்திற்குள் கருப்பு கொடியுடன் முற்றுகையிட முயன்ற சுமார் 25 காங்கிரஸ் கட்சியினரை டவுன் போலீசார் தடுத்து நிறுத்தி வேனில் ஏற்றி சென்றனர். இதனால் ரெயில் நிலையம் முன்பு பரபரப்பு ஏற்பட்டது.

Tags:    

மேலும் செய்திகள்