குழித்துறை நகராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்ட காங்கிரசார்

சாலை சீரமைக்காததை கண்டித்து குழித்துறை நகராட்சி அலுவலகத்தை காங்கிரசார் முற்றுகையிட்டனர்.;

Update: 2023-07-12 18:45 GMT

குழித்துறை:

சாலை சீரமைக்காததை கண்டித்து குழித்துறை நகராட்சி அலுவலகத்தை காங்கிரசார் முற்றுகையிட்டனர்.

குழித்துறை நகராட்சிக்குட்பட்ட 4-வது வார்டான இடைவிளாகம் பகுதியில் சாலை பல ஆண்டுகளாக குண்டும், குழியுமாக காணப்படுகிறது. இதனால் அடிக்கடி விபத்துகள் ஏற்படுகிறது. இதனை சீரமைக்காததை கண்டித்து நேற்று குழித்துறை நகராட்சி அலுவலகத்தை முற்றுகையிட போவதாக காங்கிரஸ் ஓ.பி.சி. பிரிவு சார்பாக அறிவிக்கப்பட்டிருந்தது. அதன்படி நேற்று காங்கிரசார் வெட்டு மணியில் உள்ள குழித்துறை நகராட்சி அலுவலகம் முன்பு திரண்டு முற்றுகையிட்டனர். உடனே போலீசார் அவர்களை உள்ளே நுழைய விடாமல் தடுத்தனர்.

அதைத்தொடர்ந்து போராட்டக்காரர்கள் நகராட்சி அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

இந்த போராட்டத்திற்கு காங்கிரஸ் ஓ.பி.சி. பிரிவு மாநில துணைத்தலைவர் ஜோஸ்லால் தலைமை தாங்கினார். குழித்துறை நகர காங்கிரஸ் தலைவர் சுரேஷ், கட்சியின் மாநில பொதுச் செயலாளர் பால்ராஜ், மாநில மீனவர் அணி தலைவர் ஜார்ஜ் ராபின்சன், மேற்கு மாவட்ட இளைஞர் காங்கிரஸ் தலைவர் திபாகர், மேல்புறம் வட்டார காங்கிரஸ் தலைவர் ரவிசங்கர் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்