காங்கிரஸ் ஆலோசனை கூட்டம்

சிவகங்கையில் உட்கட்சி தேர்தல் தொடர்பாக காங்கிரஸ் ஆலோசனை கூட்டம் நடந்தது.

Update: 2022-06-06 18:36 GMT

சிவகங்கை,

காங்கிரஸ் உட்கட்சி தேர்தல் குறித்த மாவட்ட கூட்டம் சிவகங்கையில் மாவட்ட தலைவர் சத்தியமூர்த்தி தலைமையில் நடந்தது. தேர்தல் அதிகாரி அஜீஸ்அதாலன், தென்மண்டல தேர்தல் ஒருங்கிணைப்பாளர் ஜெயசிம்மா, மாநில ஒழுங்கு நடவடிக்கை குழு தலைவர் முன்னாள் எம்.எல்.ஏ. ராமசாமி, காரைக்குடி தொகுதி எம்.எல்.ஏ. மாங்குடி,முன்னாள் மாவட்ட தலைவர் ராஜரத்தினம் ஆகியோர் முன்னிலை வகித்தனர். கூட்டத்தில் மாநில மகளிரணி துணைத்தலைவி ஸ்ரீவித்யா கணபதி, எஸ்.சி.,எஸ்.டி. பிரிவு மாநில ஒருங்கிணைப்பாளர் ராஜேந்திரன், நகர் தலைவர் பிரபாகரன், மாவட்ட துணைத்தலைவர் சண்முகராஜன் மாவட்ட கவுன்சிலர் சாந்தாராணி, துணைத்தலைவர் வக்கீல் கணேசன், சிவகங்கை நகர் கவுன்சிலர்கள் மகேஷ்குமார், விஜயகுமார், பொருளாளர் பழனியப்பன், மாவட்ட சிறுபான்மை பிரிவு தலைவர் சையது இப்ராஹிம் மற்றும் வட்டார, நகர், பேரூராட்சி தலைவர்கள் கலந்து கொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்