கறம்பக்குடியில் காங்கிரசார் நடைபயண பிரசாரம்
கறம்பக்குடியில் காங்கிரசார் நடைபயண பிரசாரம் நடைபெற்றது.
கறம்பக்குடி:
கறம்பக்குடி வட்டார, நகர காங்கிரஸ் கட்சி சார்பில் அரிசி, பருப்பு மீதான மத்திய அரசின் வரிவிதிப்புக்கு எதிர்ப்பு தெரிவித்தும், விலைவாசி உயர்வை கண்டித்தும் நடைபயண பிரசாரம் நடைபெற்றது. இப்பிரசார பயணத்திற்கு வட்டார காங்கிரஸ் தலைவர் ஞானசேகரன் தலைமை தாங்கினார். மாவட்ட தலைவர் முருகேசன் நடை பயண பிரசாரத்தை தொடங்கி வைத்தார். இதில் மாநில பொதுச்செயலாளர் பெனட் அந்தோணிராஜ் உள்பட காங்கிரஸ் நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர். இப்பிரசார பயணம் ரெகுநாதபுரத்தில் தொடங்கி மருதன் கோன்விடுதி, நால்ரோடு வழியாக சென்று கறம்பக்குடியில் நிறைவடைந்தது. முடிவில் நகர காங்கிரஸ் தலைவர் ரெங்கநாதன் நன்றி கூறினார்.