காங்கிரஸ் தெருமுனை பிரசாரம்

ஸ்ரீவைகுண்டத்தில் காங்கிரஸ் தெருமுனை பிரசாரம் நடந்தது.

Update: 2023-04-08 18:45 GMT

ஸ்ரீவைகுண்டம்:

ராகுல் காந்திக்கு 2 ஆண்டு சிறை தண்டனை, அவரது எம்.பி. பதவி பறிக்கப்பட்டதை கண்டித்தும் ஸ்ரீவைகுண்டத்தில் 18 வார்டுகளிலும் காங்கிரஸ் கட்சி சார்பில் தெருமுனை பிரசாரம் நடந்தது. வட்டார தலைவர் நல்லகண்ணு தலைமை தாங்கினார்.

இதில் மாவட்ட பொதுச் செயலாளர் சிவகளை பிச்சையா, ஐ.என்.டி.யு.சி. சந்திரன், வட்டார செயலாளர் நிலமுடையான், ஊடகப்பிரிவு மரியராஜ், மகளிர் அணி மங்களசெல்வி, உதயா, குலசேகரநத்தம் சந்தியா, இசக்கிசெல்வி, பஞ்சவர்ணம் உள்பட காங்கிரஸ் கட்சி நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.


Tags:    

மேலும் செய்திகள்