மத்திய அரசை கண்டித்து காங்கிரஸ் ஆர்ப்பாட்டம்

ஆற்றூரில் மத்திய அரசை கண்டித்து காங்கிரஸ் ஆர்ப்பாட்டம்;

Update: 2023-03-11 18:45 GMT

திருவட்டார், 

பொதுத்துறை நிறுவனங்களை தனியாருக்கு தாரை வார்க்கும் மத்திய அரசை கண்டித்து திருவட்டார் வட்டார காங்கிரஸ் சார்பில் ஆற்றூர் சந்திப்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது. ஆர்ப்பாட்டத்துக்கு வட்டார காங்கிரஸ் தலைவர் ஜெபா தலைமை தாங்கினார். ஆற்றூர் நகர காங்கிரஸ் தலைவர் ராஜேஷ் முன்னிலை வகித்தார்.

மேற்கு மாவட்ட காங்கிரஸ் தலைவர் பினுலால் சிங், மாவட்ட கவுன்சிலர் செலின் மேரி, அகில இந்திய காங்கிரஸ் பொதுக்குழு உறுப்பினர் ரெத்தினகுமார், மாவட்ட காங்கிரஸ் செயலாளர் என்.குமார், திருவட்டார் வட்டார சிறுபான்மை பிரிவு தலைவர் ஜான் வெர்ஜின், கண்ணனூர் ஊராட்சி காங்கிரஸ் தலைவர் ஜோண், மாவட்ட பொருளாளர் ஐ.ஜி.பி .லாரன்ஸ், காட்டாத்துறை ஊராட்சி தலைவர் இசையாஸ், பேரூராட்சி தலைவர்கள் சுஜீர் ஜெபசிங் குமார் (வேர்க்கிளம்பி), பொன்.ரவி (திற்பரப்பு), மாவட்ட செயலாளர் தங்க நாடார் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்