பிரதமருக்கு தபால் அனுப்பி காங்கிரசார் போராட்டம்
திசையன்விளையில் பிரதமருக்கு தபால் அனுப்பி காங்கிரசார் போராட்டம் நடத்தினார்கள்.
திசையன்விளை:
அவதூறு வழக்கில் 2 ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்ட ராகுல்காந்தி எம்.பி. பதவி பறிக்கப்பட்டது. இதனைக் கண்டித்து திசையன்விளையில் மாவட்ட காங்கிரஸ் தலைவர் கே.பி.கே.ஜெயக்குமார் தலைமையில் காங்கிரசார் ஊர்வலமாக தபால் நிலையத்திற்கு சென்று பிரதமர் நரேந்திர மோடிக்கு ஏராளமான தபால் அட்டைகளை அனுப்பி வைத்து போராட்டத்தில் ஈடுபட்டனர். தொடர்ந்து கண்டன கோஷங்களையும் எழுப்பினர். இதில் கட்சி நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.