காங்கிரசார் ஆர்ப்பாட்டம்

கருங்கலில் காங்கிரசார் ஆர்ப்பாட்டம்;

Update: 2023-03-10 18:45 GMT

கருங்கல், 

பொதுத்துறை நிறுவனங்களின் பங்குகளை தனியாருக்கு மத்திய அரசு வழங்குவதாகவும், சமையல் கியாஸ் விலை உயர்வை கண்டித்தும் கிள்ளியூர் கிழக்கு வட்டார காங்கிரஸ் கட்சி சார்பில் கருங்கலில் உள்ள தேசிய மயமாக்கப்பட்ட வங்கி முன்பு கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது. ஆர்ப்பாட்டத்திற்கு கருங்கல் கிழக்கு வட்டார காங்கிரஸ் தலைவர் ராஜசேகரன் தலைமை தாங்கினார். கருங்கல் பேரூர் தலைவர் குமரேசன், பாலப்பள்ளம் பேரூர் தலைவர் ஜெபர்சன், கிள்ளியூர் பேரூர் தலைவர் கிளைமெண்ட் பிரேம் குமார், கீழ்குளம் பேரூர் தலைவர் ஜெயராஜ், திப்பிறமலை ஊராட்சி காங்கிரஸ் தலைவர் லெலின்குமார், மத்திகோடு ஊராட்சி காங்கிரஸ் தலைவர் மரிய அருள்தாஸ், பாலூர் ஊராட்சி காங்கிரஸ் தலைவர் சதீஷ்குமார், முள்ளங்கினாவிளை ஊராட்சி காங்கிரஸ் தலைவர் அருள்ராஜ், மிடாலம் ஊராட்சி காங்கிரஸ் தலைவர் ஜஸ்டின் ஆகியோர் முன்னிலை வகித்தனர். ராஜேஷ்குமார் எம்.எல்.ஏ. கண்டன ஆர்ப்பாட்டத்தை தொடங்கி வைத்து உரையாற்றினார். இதில் மாநில பொதுச்செயளார் பால்ராஜ், மாநில பொதுக்குழு உறுப்பினர் பால்மணி, மாவட்ட பஞ்சாயத்து உறுப்பினர் ஜோபி, கருங்கல் பேரூராட்சி தலைவர் சிவராஜன், பாலப்பள்ளம் பேரூராட்சி தலைவர் டென்னிஸ் உள்பட பலர் கலந்து கொண்டு மத்திய அரசுக்கு எதிராக கண்டன கோஷங்களை எழுப்பினர்.

Tags:    

மேலும் செய்திகள்