காங்கிரஸ் ஆர்ப்பாட்டம்

அமித்ஷா வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்து காங்கிரஸ் கட்சியினர் ஆர்ப்பாட்டம் செய்தனர்

Update: 2023-07-28 20:45 GMT

மதுரை

பா.ஜனதா மாநில தலைவர் அண்ணாமலையின் என் மண், என் மக்கள் பாதயாத்திரை நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக, மத்திய உள்துறை மந்திரி அமித்ஷா நேற்று மாலை 4.25 மணிக்கு தனி விமானம் மூலம் மதுரைவந்தார். மதுரை வந்த அவரை கலெக்டர் சங்கீதா, போலீஸ் கமிஷனர் நரேந்திரன் நாயர், பா.ஜ.க. மூத்த நிர்வாகிகள் பூங்கொத்து கொடுத்து வரவேற்றனர். இதனை தொடர்ந்து அமித்ஷா, ராணுவ ஹெலிகாப்டர் மூலம் மாலை 4.35 மணிக்கு புறப்பட்டு, ராமேசுவரம் சென்றார். இதற்கிடையே அமித்ஷா வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்து காங்கிரஸ் கட்சியின் சார்பில் கருப்பு கொடி ஏந்திய போராட்டம் நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டிருந்தது. அதன்படி, காங்கிரஸ் கட்சியின் எஸ்.சி. பிரிவு மாநில தலைவர் ரஞ்சன்குமார் தலைமையில் அக்கட்சியை சேர்ந்தவர்கள் பெருங்குடி விமான நிலையம் செல்லும் பிரதான சாலையில் உள்ள அம்பேத்கர் சிலை முன்பு ஆர்ப்பாட்டம் செய்தனர். மேலும் அவர்கள் அமித்ஷா வருகையை கண்டித்தும், மணிப்பூர் சம்பவத்தை கண்டித்தும் கோஷங்கள் எழுப்பினர். இந்த போராட்டத்தில், காங்கிரஸ் கட்சியின் மாநகர் மாவட்ட தலைவர் கார்த்திகேயன் உள்ளிட்ட பெண் நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்